நாங்கள் ஆன்லைன் e- காமர்ஸ் நுழைந்தது எப்படி , நாங்கள் ஏன் பாராம்பரியம் என அழைத்தோம்?
நேர்மையாக சொல்ல வேண்டும் என்றால் எதுவுமே திட்டமிடப்படவில்லை , தானாக நடந்தது
நாங்கள் மூன்று பேர IT தொழில் துறையில் வேலை செய்கிறோம், நாங்கள் தமிழ்நாட்டில் உள்ள திருநெல்வேலி அருகில் உள்ள கிராமத்தை சேர்த்தவர்கள்.
எங்கள் ஒவ்வொரு குடும்பமும் சில பாரம்பரிய வணிக சமூகங்களுக்கு செய்து வந்தவர்கள் என்பதை நாளடைழ்வில் தெரிந்துகொண்டோம்.
பெருநிறுவன ஆதிக்கம் காரணமாக இந்த பாரம்பரிய வணிகம் மறைந்தே போனது (மர செக்கு எண்ணெய், பனை வெல்லம், பல்வேறு அரிசி வகைகள் ,)
கிராமங்களில் மிக அரிதாக உள்ளவர்கள் இந்த மரபு ரீதியாக தயாரிக்கப்படும் உணவு வகைகளை பயன்படுத்துகின்றனர், நாங்கள் அவர்களில் ஒன்று,
சுத்திகரிக்கப்பட்ட எண்ணை, பளபளப்பான சர்க்கரை, அரிசி மற்றும் பல பெருநிறுவன பொருட்களுக்கு மக்கள் அவர்களின் விளம்பர மோகத்தால் மாறிவிட்டார்கள் என்றே சொல்லவேண்டும்.
நாங்கள் பாரம்பரிய உணவுகளை எங்களுக்குள் பகிர்ந்து கொண்டோம், மெதுவாக மற்ற நண்பர்கள் மற்றும் சுற்றில் இருப்பர்வகள் எங்களிடம் வாங்கி வர சொன்னார்கள்.
நாங்கள் சொந்த ஊருக்குப் போகும் போதெல்லாம், எங்கள் கிராமத்திலிருந்து இந்த பாரம்பரிய உணவுகளை எடுத்துக் கொள்வோம், பின்னர் தேவை அதிகமானதால் நாங்கள் அதை பார்சல் சேவைகளில் சேகரிக்க ஆரம்பித்தோம்.
நாளடைவில் எங்கள் குடும்பம் இன்னும் அதிக உற்பத்தி செய்ய வேண்டிய இருந்தது . அதே நேரத்தில் அவர்கள் சந்தோஷமாக இருக்கிறார்கள், ஏனென்றால் அதன் மூலமாக சிறிய வருமானம் ஈட்ட முடிந்தது. இன்னும் சுவாரசியமாக அவர்கள் எங்கள் முன்னோர்கள் என்ன செய்தார்களலோ அதை அவர்கள் செய்கிறார்கள்.
இப்போது மக்கள் மிகவும் ஆரோக்கியமான உணவு பழக்கவழக்கங்களுக்கு மாறிவருகிறார்கள், மேலும் பாரம்பரிய உணவுகளலே ஆரோக்கிய பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு சரியான தேர்வு என்று கண்டறிந்துள்ளன.
எங்கள் நண்பர்கள் வேறு நகரங்களுக்கு சென்றதால் பார்சல் மூலமாக அனுப்ப வேண்டிய இருந்தது, அவர்கள் Facebook அல்லது WhatsApp குழுக்களைக் கேட்கும்போது அவற்றைக் பார்சல் வழியாக அனுப்பினோம் , இது நகரங்களில் கிடைப்பது அரிது மற்றும் தரம் சொல்லமுடியாது.
ஜல்லிக்கட்டு வேலை நிறுத்தம் எல்லோருக்கும் நினைப்பு இருக்கும் , போர்ராட்டதின் போது மக்கள் அதிகமாக அந்நிய பொருட்களை எதிரித்தும் , நம்முடைய பாரம்பரிய பொருள்களின் உன்னதத்யம் எடுத்துரைத்தார்கள் , அப்பொழுதுதான் முடிவு செய்தோம் எங்களுடைய இந்த பாரம்பரிய பொருட்களை ஆன்லைன் வழியாக விற்பதென்று.
இதன் மூலமாக தங்களுடைய குடும்ப நலனில் உண்மையான அக்கறை உள்ளவர் மாற தொடங்கவர்கள் என்று நம்பினோம்.
எங்களுடைய எண்ணம் உங்கள் குடுப்பதிலிருந்து ஆரோக்கியமற்ற எண்ணெய் , சினி , ஆகியவற்றை நீக்குவது.
நம் முந்தைய தலைமுறையினர் பயன்படுத்திய பொருள்களை ஒவ்வொரு இந்திய வீட்டுக்கும் எடுத்து செல்வோம்.
நம் பாரம்பரிய உணவுகளை இணையத்தில் கொண்டு வர முயற்சிக்கையில், அது "பாராம்பிரியம்" என பெயரிட்டது.
இன்றும் தொடங்கி ஒரு மகிழ்ச்சியான மற்றும் ஆரோக்கியமான எதிர்காலத்தை நோக்கி நகருவோம்!